மாடலிங் மூலம் மீடியாதுறைக்குள் அறிமுகமாகி பிரபலமான சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அசத்தி வருபவர் ஸ்வேதா ஸ்ரிம்டன்.மாடலிங்கில் பெரிதும் ஆர்வமுடைய இவர் விளம்பரப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.

இவற்றில் கிடைத்த வரவேற்பை அடுத்து சில சீரியல்களிலும்,படங்களிலும் சின்ன சின்ன முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ஸ்வேதா ஸ்ரிம்டன்.அடுத்ததாக ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ஸ்வேதா ஸ்ரிம்டன்.

இந்த தொடரில் முக்கிய வில்லியாக நடித்து வரும் இவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதனை தவிர ஜீ தமிழின் மற்றொரு ஹிட் தொடரான நினைத்தாலே இனிக்கும் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவர் இனி ஒரு காதல் செய்வோம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இவர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் இருந்து முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.