இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த முன்னணி வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் இந்தியாவிற்காக பல டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டரானா ஹர்பஜன் சிங் தற்போது சினிமாவில் இறங்கியுள்ளார்.

தமிழில் இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக விஜய் டிவியின் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க,  இவர்களுடன் இணைந்து பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷும் நடித்துள்ளார்.

மேலும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சேன்ட்டோ ஃபிலிம்ஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்திற்கு சி.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஊரடங்கிற்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரண்ட்ஷிப் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியானது.