தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் ,இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையே கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் நேரடியாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.இந்த படத்தில் ரஜிஷா விஜயன்,லிஜோமோல் ஜோஸ்,மணிகண்டன்,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் அனல்பறக்கும் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்