வைரலாகும் எதற்கும் துணிந்தவன் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | August 05, 2021 19:49 PM IST
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.
தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் ,இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்குகிறார் , இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,திவ்யா துரைசாமி,இளவரசு,சிபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கொரோனாவுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பாண்டிராஜ் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Shooting Time #ET 🗡 pic.twitter.com/4j6xLoVUxx
— Pandiraj (@pandiraj_dir) August 5, 2021