சூர்யா 40 கிளைமாக்ஸ் குறித்து இமான் கொடுத்த அசத்தல் அப்டேட் !
By Aravind Selvam | Galatta | March 21, 2021 10:46 AM IST

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.
தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸில் சமீபத்தில் நடித்து வந்தார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 40 படத்தில் நடிக்கிறார்.பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,திவ்யா துரைசாமி,இளவரசு,சிபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் நடந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி கடைசியில் தொடங்கியது சில நாட்களுக்கு சூர்யா இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார்.சமீபத்தில் பிரபல சினிமா நிருபர் கௌஷிக்குடன் நடந்த உரையாடலில் சூர்யா 40 குறித்து சில முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.அதில் அவர் சூர்யாவுடன் இணைவது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் பாடல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும்,இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்கான தீம் ம்யூசிக்கை சமீபத்தில் படப்பிடிப்பிற்காக முடித்து கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Good news for Chandralekha serial fans - this much loved actor is back again!
21/03/2021 04:34 PM
This Bigg Boss sensation becomes a mother - blessed with a baby girl!
21/03/2021 03:44 PM
Actor - Politician Karthik hospitalized in Chennai for breathing problems!
21/03/2021 01:59 PM