சினிமாவில் பல துறைகளில் போராடி ஜெயித்த பிரபலங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவ்வப்போது அவர்களின் வாழ்க்கை வரலாறை பயோபிக்காக எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.சமீபத்தில் வெளியான சாவித்ரியின் நடிகையர் திலகம் மற்றும் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.

Suresh Raina Suggests Dulquer Salmaan Shahid Kapoor For His Biopic

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும்,ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடுபவர் சுரேஷ் ரெய்னா.தோனிக்கு பிறகு ரெய்னாவை சென்னை ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள்.அதனால் அவரை செல்லமாக சின்ன தல என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

Suresh Raina Suggests Dulquer Salmaan Shahid Kapoor For His Biopic

சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த சுரேஷ் ரெய்னா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.உங்கள் வாழ்க்கை வரலாறை வைத்து படமெடுத்தால் யாரை ஹீரோவாக பரிந்துரைப்பீர்கள் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த ரெய்னா துல்கர் சல்மான் அல்லது ஷாஹித் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.