சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு ஸ்பெஷல் பரிசு... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ

இயக்குனர் நெல்சனுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஜாக்கி ஷெராஃப்,jailer director nelson got a special gift from jackie shroff | Galatta

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற ஜாம்பவானாகவும் என்றென்றும் உச்ச நட்சத்திர நாயகராகவும் ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மார்ச் ஏழாம் தேதி தொடங்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரை பயணத்தில் 170வது திரைப்படமாக நடிக்கும் புதிய தலைவர் 170 திரைப்படத்தையும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்தது. தலைவர் 170 திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இளம் இயக்குனர்களின் பெயர்களும் குறிப்பிடப்படும் ஒரு சில இயக்குனர்களின் பெயர்களும் உலா வந்த நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் எழுதி இயக்கி வருகிறார். படையப்பா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன், நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும், ஜெயிலர் திரைப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளரான ராக்ஸ்டார் அனிருத் பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் விதமாக ஜெயிலர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் நெல்சனுக்கு பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஒரு விண்டேஜ் மாடல் ஸ்கூட்டரை ஸ்பெஷல் பரிசாக கொடுத்துள்ளார். அந்த ஸ்கூட்டரோடு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் வெளியிட்டுள்ள இயக்குனர் நெல்சன், "இந்தக் க்யூட்டான சர்ப்ரைஸ்க்கு நன்றி சார்... மேலும் லவ் யூ சார்" என நடிகர் ஜாக்கி ஷெராஃப் அவர்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஸ்பெஷல் பரிசாக வந்த விண்டேஜ் ஸ்கூட்டரோடு இயக்குனர் நெல்சன் இருக்கும் அந்த புகைப்படம் இதோ…
actress kaniha ankle fracture and knee ligament tear

சினிமா

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட மாஸ் அப்டேட்!"- ஹோலி பண்டிகை வாழ்த்துக்களோடு வந்த அதிரடி அறிவிப்பு இதோ!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகரின் மறைவால் துயரத்தில் தத்தளித்த குடும்பம்... உதவிக்கரம் நீட்டிய Dஇமான்! எமோஷ்னலான வீடியோ இதோ
சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகரின் மறைவால் துயரத்தில் தத்தளித்த குடும்பம்... உதவிக்கரம் நீட்டிய Dஇமான்! எமோஷ்னலான வீடியோ இதோ

அப்பா சரத்குமாருக்கு போன் போட்டு நட்சத்திர ஜன்னலில் பாட்டு பாடிய மகள் வரலக்ஷ்மி... கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

அப்பா சரத்குமாருக்கு போன் போட்டு நட்சத்திர ஜன்னலில் பாட்டு பாடிய மகள் வரலக்ஷ்மி... கலக்கலான வீடியோ இதோ!