அப்பா சரத்குமாருக்கு போன் போட்டு நட்சத்திர ஜன்னலில் பாட்டு பாடிய மகள் வரலக்ஷ்மி... கலக்கலான வீடியோ இதோ!

அப்பா சரத்குமாருக்கு போன் போட்டு பாட்டு பாடிய மகள் வரலக்ஷ்மி,Varalaxmi sings song for sarathkumar in galatta fans meet | Galatta

தனக்கே உரித்தான தனித்துவமான நடிப்பாலும் படபடவென பேசும் ஸ்டைலாலும் தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வழியாகவும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமாக நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

வெறும் கதாநாயகியாக பாடல்களுக்கு நடனம் ஆடுவது கதாநாயகனுடன் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகளில் நடிப்பது என்று இல்லாமல் தன்னுடைய வேடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை, இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் விக்ரம் வேதா, ஆக்ஷன் கிங் அர்ஜுனின் நிபுணன், சிபி சத்யராஜின் சத்யா, லிங்குசாமியின் சண்டக்கோழி 2 மற்றும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் ஆகிய படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய வரலக்ஷ்மி, தளபதி விஜய் உடன் இணைந்து சர்க்கார், தனுஷின் மாரி 2, இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல், பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட திரைப்படங்களிலும் மிக முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். 

கடைசியாக நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் இந்த 2023ம் ஆண்டு வெளிவந்த விந்தியா விக்டிம் வெர்டிக்ட் 3 எனும் V3 திரைப்படம், பொங்கல் வெளியீடாக தெலுங்கில் நடிகர் நந்தாமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த வீரசிம்ம ரெட்டி படம், மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மைக்கேல் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான கதாபாத்திரங்களில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார். இந்த வரிசையில் அடுத்து அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் சபரி படத்தில் கதாநாயகியாக நடிகை வரலக்ஷ்மி நடிக்கிறார்

தொடர்ந்து பாம்பன், பிறந்தால் பராசக்தி  உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஹனுமான் எனும் தெலுங்கு படத்திலும், கலர்ஸ் என்ன மலையாள படத்திலும், லாகம் எனும் கன்னட படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் தயாராகியுள்ள கொன்றால் பாவம் திரைப்படம் நிறைய உடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் FANS MEETல் ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் தனது அப்பா சரத்குமார் அவர்களை போனில் அழைத்த நடிகை வரலக்ஷ்மி நம்மோடு சேர்ந்து நட்சத்திர ஜன்னலில் பாடலை அவருக்காக பாடினார். பாடலைக் கேட்ட சரத்குமார் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் கலாய்த்ததும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கலக்கலான அந்த வீடியோ இதோ…

 

AK62க்கு பின் அஜித் குமாரின் அடுத்த அட்டகாசமான திட்டம் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

AK62க்கு பின் அஜித் குமாரின் அடுத்த அட்டகாசமான திட்டம் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே
சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே

விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே
சினிமா

விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே