வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகரின் மறைவால் துயரத்தில் தத்தளித்த குடும்பம்... உதவிக்கரம் நீட்டிய Dஇமான்! எமோஷ்னலான வீடியோ இதோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகரின் குடும்பத்திற்கு உதவிய Dஇமான்,D imman helps varuthapadatha valibar sangam actors family | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் D.இமான். தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான D.இமான் பின்னர் விசில் திரைப்படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடலுக்கு பிறகு மிகப் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து வரிசையாக பல தமிழ் திரைப்படங்களுக்கு இசை அமைத்த D.இமான்  இசையில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம், மாசிலாமணி, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் செம்ம ஹிட் பாடல்களாக ஒலித்தன.

பின்னர் மைனா திரைப்படத்தில் D.இமான் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரமாய் ஒலிக்க தொடங்கின. தொடர்ந்து  சிவகார்த்திகேயனின் மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா - தளபதி விஜயின் ஜில்லா - விஷாலின் பாண்டியநாடு, பாயும் புலி, மருது - விஜய் சேதுபதியின் ரம்மி, ரெக்க, கருப்பன் - ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், மிருதன் - நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து தனது இசை மழையால் ரசிகர்களை நனைய வைத்தார் D.இமான். இந்த வரிசையில் அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படத்திற்கு மிக சிறப்பாக இசையமைத்த D.இமான் அப்பபத்திற்காக தனது முதல் தேசிய விருதும் பெற்றார். அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த D.இமான் இசையில் அடுத்தடுத்து மலை, பப்ளிக், வள்ளி மயில் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
 
இதனிடையே தற்போது இசையமைப்பாளர் D.இமான் செய்துள்ள ஒரு நற்செயல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீம ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் குறிப்பிடப்படும் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் பவுன்ராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பவர் காலமானார். நடிகர் பவுன்ராஜின் திடீர் மரணத்தால் அவரது குடும்பம் மிகுந்த வேதனைகளிலும் துயரத்திலும் தத்தளித்து வருகிறது. பொருளாதார ரீதியாக மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் நடிகர் பவுன்ராஜன் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு தற்போது இசையமைப்பாளர் D.இமான் பெரும் உதவி செய்துள்ளார். முன்னதாக தனது அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு சமூக நலம் சார்ந்த உதவிகளை செய்து வரும் இசையமைப்பாளர் D.இமான் தற்போது நடிகர் பவுன்ராஜின் குடும்பத்திற்கும் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சிறு குழந்தைகளோடு மிகுந்த போராட்டத்தில் வாழ்க்கையை நகர்த்தி வரும் பவுன்ராஜ் அவர்களின் மனைவிக்கு அவர் சொந்த காலில் நிற்க, தன் வாழ்க்கையை புது பலத்தோடு எதிர்கொண்டு முன்னோக்கி நடக்க உதவும் வகையில் இட்லி - தோசை மாவு அரைக்கும் கிரைண்டர் மற்றும் அதனை விற்பனை செய்ய தேவையான பொருட்களை இசையமைப்பாளர் .Dஇமான் வழங்கியுள்ளார். வழக்கமாக துயரத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இடையே அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேதத்தை கொடுத்து தைரியத்தை கொடுத்து உதவும் வகையில் இசையமைப்பாளர் D.இமான் செய்துள்ள இந்த நற்செயலுக்கு பாராட்டுகளுக்கும் குவிந்து வருகின்றன. மறைந்த நடிகர் பவுன்ராஜன் குடும்பத்திற்கு இசையமைப்பாளர் D.இமான் செய்துள்ள இந்த பேரு உதவிக்கு கலாட்டா குழுமம் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து நமது கலாட்டா சேனலில் பிரத்தியேகமாக இசையமைப்பாளர் D.இமான் பேட்டி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் D.இமான் மற்றும் நடிகர் பவுன்ராஜ் அவர்களின் குடும்பம் கலந்து கொண்ட எமோஷ்னலான அந்த பேட்டி இதோ... 
 

சினிமா

"சார்பட்டா 2 தயாராகிறது!"- மீண்டும் இணையும் பா ரஞ்சித் - ஆர்யா கூட்டணி... அட்டகாசமான அறிவிப்போடு வந்த மாஸ் GLIMPSE இதோ!

AK62க்கு பின் அஜித் குமாரின் அடுத்த அட்டகாசமான திட்டம் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

AK62க்கு பின் அஜித் குமாரின் அடுத்த அட்டகாசமான திட்டம் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே
சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே