துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்காரா.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sudha Kongara Clarifies About Her Twitter Account

இதனை தொடர்ந்து இவர் சூர்யா நடிக்கும் சூரரை போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது கொரோனா காரணமாக இந்த படம் தள்ளிப்போனது.இவர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

Sudha Kongara Clarifies About Her Twitter Account

இந்நிலையில் இவரது போலி ட்விட்டர் கணக்கு மூலம் சிலர் ஜுன் 22 விஜயின் பிறந்தநாள் அன்று தனது அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டிருந்தார்.இது குறித்து விளக்கமளித்துள்ள சுதா கொங்கரா தான் எந்த சமூகவலைத்தளத்திலும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.மேலும் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்தே அடுத்த பட அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.