நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்.ஐ.ஆர், காடன் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் எஃப்ஐஆர் படத்தின் எடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காடன் திரைப்படம் தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில் இன்று நேற்று நாளை 2 குறித்த அப்டேட்டும் வெளியானது. 

Vishnu Vishal Shared His Police Look Photo

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறு வயதில் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் போலீஸ் உடையில் உள்ளனர். பல வருடங்களுக்கு முன்... அப்பாவுடன் போலீஸ், போலீஸ் விளையாட்டு என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Vishnu Vishal Shared His Police Look Photo

இந்த ஊரடங்கு நேரத்தில் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் பட டைட்டில் அறிவிப்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Many many years ago... Playing police police with my dad :) #throwback

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on