வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

STR Maanaadu Chennai Schedule Wrapped Up

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR Maanaadu Chennai Schedule Wrapped Up

இந்த படத்தின் சென்னை ஷூட்டிங் 3 நாட்கள் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.இந்த காட்சியை STR 2 நாட்களில்  முடித்துவிட்டு ஹைதராபாத்தில் அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் என்று STR-ன் மேனேஜர் ஹரிஹரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.