ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த விக்கி டோனார் ரீமேக் தமிழில் தாராள பிரபு என உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

harishkalyan harishkalyan

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் சின்ன கலைவானர் நடிகர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

harishkalyan

நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தியது. இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த STR, ஹரிஷ் கல்யாண் மற்றும் தாராள பிரபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் என்ற தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியது. அப்போது பேசியவர், நகைச்சுவையுள்ள காட்சிகளில் அசத்தி விடுவாய், ஒரு முழுமையான ஹீரோ என்றால் செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடிக்க வேண்டும். அதை நீ சரியாக செய்துள்ளாய். இது உன்னை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று ஹரிஷ் கல்யாணை பாராட்டியுள்ளார் STR. சிறு வயதிலிருந்தே கேமராவை பார்க்கும் STR-க்கு ரசிகர்களின் நாடி நன்றாகவே தெரியும். அவரிடமிருந்து கிடைத்த இந்த பாராட்டு ஹரிஷ் கல்யாணிற்கு ஸ்பெஷல் தான்.