திரையுலகின் இயக்குனர் இமயமாய் விளங்குபவர் பாரதிராஜா. இவர் நடித்து இயக்கும் திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் வெளியானது. வயதான முதியவருக்கும் இளம்பெண்னுக்கும் இடையிலான கதையான இதில் நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

bharathiraja bharathiraja

இந்த படத்திற்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. NR ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். 

meendumorumariyathai meendumorumariyathai

படத்தின் ட்ரைலர், பாடல் வீடியோ மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது கோடி கோடியாய் பாடல் வீடியோ வெளியானது. விஜய் யேசுதாஸ் மற்றும் வைஷாலி பாடியுள்ள இந்த பாடல் வரிகளை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.