விஷால் நடித்த திமிரு மற்றும் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார். பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளார். 

இருப்பினும் தனது கணவருடன் சேர்ந்து சில படங்களை தயாரித்து வந்தார். 2018 ம் ஆண்டு சில சமயங்களில் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அண்டாவக் காணோம் என்ற படத்தில் நடித்துள்ளார். வேல்மதி இயக்கியுள்ள இப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை JSK ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து லியோ விஷன் நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார். 

தனது அன்றாட நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாகக் கொண்ட இவர், சமீபத்தில் கொடைக்கானல் சென்றுள்ளார். அப்போது இவர் தங்கியிருந்த இடத்தில் குரங்குகள் சில புகுந்து செய்த அட்டகாசத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். குரங்குகளுடன் ஏற்பட்ட வினோதமான அனுபவத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவுடன், பால்கனியில் வித்தியாசமாக சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். அங்கு புகுந்த சில குரங்குகள் நான் வைத்திருந்த நட்ஸ்களை சிதறடித்து, கொறித்துக் கொண்டிருந்தன. மற்றொரு வீடியோவில், ஜன்னல் வழியாக ஸ்ரேயாவின் அறைக்குள் புகுந்த குரங்குகள் அவரது பையில் வைத்திருந்த நட்ஸ்களை எடுத்து சாப்பிட்டுள்ளன. குரங்குள் செய்த அட்டகாசத்தை வித்தியாசமாக பதிவிட்டுள்ள ஸ்ரேயாவின் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

ஃபிட்னஸில் அதிக அக்கறை கொண்ட ஸ்ரேயா ரெட்டி, அவ்வப்போது தான் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சமீபத்தில் போலீஸ் உடையில், கம்பி ஒன்றை பிடித்து அவர் அந்தரத்தில் தொங்கிய வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sriya Reddy (@sriya_reddy)