தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு. அத்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்திற்கு தயாராகி வருகிறார். அது தவிர்த்து கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D43 படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

இயக்குனராக அவரது அறிமுக படம் பா.பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது. பவர் பாண்டி படத்தில் வயதான பிறகும் மனதில் இருக்கும் காதல் உணர்வை காட்டும் விதத்தில் தான் கதை இருக்கும். ராஜ்கிரண் மற்றும் ரேவதி ஆகியோரின் நடிப்பும் அதிகம் பாராட்டுகளை பெற்றது. பா பாண்டி படம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது இந்த படம். இந்நிலையில் பா. பாண்டி படத்தை பற்றி நடிகர் எஸ். ஜே. சூர்யா ட்விட்டரில் மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

இந்த பாடத்தின் ஒரு பாடலை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் எஸ். ஜே. சூர்யா, தியேட்டரில் படத்தை பார்த்த அனுபவம் பற்றி பேசியிருக்கிறார். ஆனந்த கண்ணீரில் நனைய விட்ட படம்.. Forum மாலில் Palazzo தியேட்டரில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் தனுஷ் சார் உடன் பேசிய நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என எஸ். ஜே. சூர்யா பதிவிட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் தனுஷ் உங்களது அன்பான வார்த்தைகளை மறக்க முடியாது சார். நன்றி" என பதில் கூறியிருக்கிறார்.

பவர் பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கி வந்த திரைப்படம் நான் ருத்ரன். வரலாறு சிறப்புமிக்க இந்த படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல ஒரு பிளாஷ்பேக் பகுதியும் இப்படத்தில் உள்ளது என கூறப்படுகிறது. அந்த பகுதியை மட்டும் இயக்குனர் செல்வராகவனை இயக்க கேட்டுள்ளார் தனுஷ் என்றும் சமீபத்தில் செய்திகள் கிளம்பியது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை வெளிவரவில்லை. 

தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் நாகர்ஜுனா, அதிதி ராவ் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். மேலும் எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.