தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்குக்கிடையே அந்த ஷூட்டிங் நடந்து வரும் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார்.இந்த விழாவின் சில வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்ளைல் ட்ரெண்ட் அடித்து வந்தன.இவரது மிமிக்கிரி வீடியோ செம்ம வைரலாக இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது அந்த கல்லூரி மாணவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் பாடல் பாடும் ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது.எதிர்நீச்சல் படத்தின் பூமி என்னை சுத்துதே பாடலை சூப்பராக பாடி அசத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Life At KPRIET (@lifeatkpr)