தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

நடிகராக பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களையும் பெற்றுள்ளார்.இவர் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படமும் அடுத்து விரைவில் வெளியாகவுள்ளது.

இதனை அடுத்து இவர் அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் தயாராகியுள்ள டான் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் தொடங்கின.இவர் அடுத்ததாக தெலுங்கில் வெற்றி பெற்ற Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப்புடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்றும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் bilingual ஆக தயாராகிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ராஷ்மிகா இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தனது டாக்டர் படத்தின் தெலுங்கு ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.