அயலான் படத்தின் அசத்தல் அப்டேட் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | November 04, 2020 18:35 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.
யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.
இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.
அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து , இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் ட்ரைலர் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளதாக படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் பொங்கல் அன்று அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Trailer mode ON #Bhoomi #Ayalaan #Sulthan #Bagheera #Trailer #Teaser pic.twitter.com/rdOEcxKuZx
— Editor Ruben (@AntonyLRuben) November 3, 2020
Indraja Shankar to enter Bigg Boss 4 ? Here is what you need to know!
04/11/2020 05:12 PM
Complaint filed against Simbu for harassing snake at Eeswaran shooting spot
04/11/2020 04:20 PM