தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்சன் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் S.J.சூர்யா மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் S.A.சந்திரசேகரன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக வெளியான டீசர் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தின் முதல் பாடலான மெஹரேஸையலா பாடல் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியானது. பரபரப்பாக நடைபெற்று வந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் விரைவில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.