மாஸ் காட்சிகளுக்கிடையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு.. - டக்கர் படக்குழு வெளியிட்ட சிறப்பு காட்சி.. – வைரலாகும் வீடியோ உ

சித்தார்த்தின் டக்கர் படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு வைரல் வீடியோ உள்ளே - Siddharth takkar movie yogibabu sneak peek out now | Galatta

இளமை துள்ளும் நடிகராக தென்னிந்தியாவில் வலம் வரும் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டக்கர்’. பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான இப்படத்தினை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சாக்லேட் பாய் சித்தார்த் முதல் முறையாக ரக்கர்ட் பாய் போல் மாஸ் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடிக்க மேலும் படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய  ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்துள்ளார்.மேலும் இசையமைப்பாளர்  நிவாஸ்.கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  முன்னதாக இவர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட் ஆனது குறிப்பிடதக்கது.

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் சித்தார்த் நடிப்பில் டக்கர் திரைப்படம் நேற்று ஜூன் 9 ம் தேதி தமிழ், தெலுங்கில் உலகமெங்கும் வெளியானது. ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பில் டக்கர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருகிறது. மேலும் சித்தார்த் அவர்களின் திரைப்பயணத்திளே அதிக திரையரங்குகளில் பிரம்மாண்டமான திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது டக்கர் திரைப்படம்.  

இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முன்னாதாக படத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான 6 காட்சிகள் படம் வெளியவதற்கு முன்பும் பின்பும் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி முன்னதாக சித்தார்த், திவ்யன்ஷா, விஜே விக்னேஷ் காந்த் ஆகியோரின் அறிமுக காட்சிகள் வெளியானது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக படத்தின் நான்காவது எபிசொட் யோகி பாபு காட்சியினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சித்தார்த் மற்றும் கதாநாயகியை தேடும் ரவுடியிடம் நக்கலுடன் நையாண்டி தனமாக பேசி யோகி பாபு அடி வாங்கும் காட்சியாக அமைந்துள்ளது. வயிறு குலுங்க வைக்கும் கவுண்டர் காமெடிகள் மூலம் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சித்தார்த் இப்படத்தையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்கம் திரைப்படமான டெஸ்ட் படத்தில் நடிகர்கள் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்து வருகிறார்.  பின்னர் ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சித்தா’ திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

“இது அஜித் சாருக்கு ரொம்ப பிடிச்சது” வாலி பட வாய்ப்பு குறித்து எஸ் ஜே சூர்யா, மாரிமுத்து பகிர்ந்த தகவல்.. -  Exclusive interview இதோ..
சினிமா

“இது அஜித் சாருக்கு ரொம்ப பிடிச்சது” வாலி பட வாய்ப்பு குறித்து எஸ் ஜே சூர்யா, மாரிமுத்து பகிர்ந்த தகவல்.. - Exclusive interview இதோ..

கோபி சுதாகர் மேல பொறாமையா? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – Exclusive Interview உள்ளே..
சினிமா

கோபி சுதாகர் மேல பொறாமையா? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – Exclusive Interview உள்ளே..

10 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! கவனம் ஈர்த்த பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.. - விவரம் உள்ளே..
சினிமா

10 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! கவனம் ஈர்த்த பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.. - விவரம் உள்ளே..