Go To Takkar Movie News »
Takkar Movie
Close
Go To Takkar Movie News »

10 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! கவனம் ஈர்த்த பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.. - விவரம் உள்ளே..

10 ஆயிரம் ஆதிபுருஷ் டிக்கெட்டுகளை வாங்கிய ரன்பீர் கபூர் விவரம் உள்ளே - Ranbir Kapoor book 10 thousand adipurush tickets | Galatta

இந்தியா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து நிற்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. பான் இந்தியா நடிகர் பிரபாஸ் ராம அவதாரத்தில் நடித்திருக்கும் இப்படத்தினர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து சீதா தேவியாக கீர்த்தி சனொன் நடிக்க  சைப் அலிகான் இராவணனாக நடித்துள்ளார். Retrophiles மற்றும் T Series தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய , அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர்.

இந்தியாவின் புராணா இதிகாசமான இராமாயணத்தை தழுவி உருவான இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி எதிர்பார்ப்பை உருவாக்கிய இப்படத்தின் முன்னோட்டம் பாடல்கள் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிவிரைவில் 6 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை முதல் டிரைலர் பெற்றது. தற்போது படத்தின் இரண்டாவது டிரைலரும் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் நாடு முழுவதும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் அரசியல் ஆளுமைகளும் இப்படத்திற்கு வரவேற்பை அளித்து வருகின்றனர்.

உதாரணமாக பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தனது சொந்த செலவில் 10 ஆயிரம் ஆதிபுருஷ் திரைப்பட டிக்கெட்டுகள் அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் சார்ந்தவருக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டு வைரலானது. தற்போது இவரை போன்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை ஆதரவற்ற குழந்தைகள் பார்க்க  வழங்க முன் வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இந்த தகவல் ரசிகர்களால் அதிகம் வரவேர்கபட்டு ரன்பீர் கபூருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. மேலும் இந்த தகவல் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

vetri maaran assistant director saran raj died in car accident check details

ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு பிரம்மாச்திரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் நடிப்பில் வெளியான ‘டூ ஜூதி மைன் மக்கர்’ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.  தற்போது அவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போர் தொழில் முதல் டக்கர் வரை..  திரையரங்குகளில் இன்று வெளியான 5  முக்கியமான திரைப்படங்களின் பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

போர் தொழில் முதல் டக்கர் வரை.. திரையரங்குகளில் இன்று வெளியான 5 முக்கியமான திரைப்படங்களின் பட்டியல் இதோ..

“என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே.!” திருமண நாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன்.. – வைரல் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

“என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே.!” திருமண நாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன்.. – வைரல் புகைப்படங்கள் உள்ளே..

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் அவர்களை திருமணம் செய்யவிருக்கும் சசிகுமார் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள் – விவரம் உள்ளே..
சினிமா

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் அவர்களை திருமணம் செய்யவிருக்கும் சசிகுமார் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள் – விவரம் உள்ளே..