“வாழ்வின் கடிமான சோதனையில்..” சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் பிரபல நடிகை கஜோல் – வைரலாகும் பதிவு இதோ..

சமூக ஊடகங்களில் இருந்து விலகும் கஜோல் காரணம் உள்ளே - Kajol takes break from all social media | Galatta

இந்திய ரசிகர்களை தன் நடிப்பினால் கடந்த மூன்று தசப்தங்களாக கவர்ந்து இழுத்து முன்னணியில் வலம் வரும் நடிகை கஜோல். கடந்த 1992 ல் பெக்குடி என்ற இந்தி படத்தில் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி பின் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார் கஜோல். 1998 ல் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘குச் குச் ஹோட்டா ஹாய்’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இன்று வரை அந்த திரைப்படம் கஜோல் அவர்களுக்கு மிகப்பெரிய கவுரவ முகவரியாக இருந்து வருகிறது. அதன்பின் கபி குஷி கபி கான், மை நேம் இஸ் கான், இஷ்க் என்று பல முக்கிய திரைப்படங்களில் நடித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல் கடந்த 1997 ல் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘மின்சார கனவு’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலே தமிழ் ரசிகர்களை கவர்ந்து இன்று வரை தமிழில் மின்சார கனவு திரைப்படம் ரசிகர்களுக்கு நெருக்கமான படமாகவே இருந்து வருகிறது. அதன்பின் தமிழில் படம் நடிக்காமல் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கஜோல் கடந்த 2017 ல் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் வில்லியாக நடித்து கவனம் ஈர்த்தார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது கஜோல் நெட் நெட்ப்ளிக்ஸ் பிரபல இணைய தொடரான லஸ்ட் ஸ்டோரி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வரும் ஜூன் மாதம் 15 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து கஜோல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ‘டிரையல்’ என்ற நீதிமன்ற கதைகளத்தில் ஒரு தொடரில் நடிக்கவுள்ளார்.

The tougher the trial, the harder you come back! Catch the trailer for my courtroom drama #HotstarSpecials #TheTrial - Pyaar Kanoon Dhokha on June 12th. Coming soon only on @DisneyPlusHS@Jisshusengupta @AlyyKhan06 @ChadhaSheeba @KubbraSait @aseemjh @banijayasia @deepak30000pic.twitter.com/nNMEJP4zDz

— Kajol (@itsKajolD) June 9, 2023

இந்நிலையில் கஜோல் தனது சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், “வாழ்வின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். அதனால் சமூக வலைதளங்களில் இருந்து ஒய்வு பெறுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் கேள்விகள் எழுப்பி அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

 

Taking a break from social media. pic.twitter.com/9utipkryy3

— Kajol (@itsKajolD) June 9, 2023

 

10 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! கவனம் ஈர்த்த பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.. - விவரம் உள்ளே..
சினிமா

10 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! கவனம் ஈர்த்த பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.. - விவரம் உள்ளே..

கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த வெற்றிமாறனின் உதவி இயக்குனர்.. – விசாரணையில் கைதான நடிகர் .. விவரம் உள்ளே..
சினிமா

கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த வெற்றிமாறனின் உதவி இயக்குனர்.. – விசாரணையில் கைதான நடிகர் .. விவரம் உள்ளே..

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்.. – உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் தகவல் உள்ளே..
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்.. – உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் தகவல் உள்ளே..