இந்தியாவின் முதல் முறையாக.. டக்கர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ உள்ளே..

வைரலாகும் சித்தார்த் படத்தின் சிறப்பு காட்சி வைரல் வீடியோ உள்ளே - Team released special scene from Siddharth takkar movie | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 9ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டக்கர்’ . ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த கப்பல் படத்தையடுத்து அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய டக்கர் திரைப்படத்தில் சித்தார் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திவ்யன்ஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, அபிமன்யூ சிங், முனிஸ்காந்த், ஆர் ஜே விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். PASSION STUDIOS தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய ஜிஏ கௌதம் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவர் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியுள்ள டக்கர் திரைபடத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. காதல் கதையுடன் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு வித்யாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி, இந்தியாவின் முதல் முறையாக திரைப்படத்த்தில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சிகளை தொடராக இணையத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி 6 எபிசோடுகளை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.. அதில் முதல் படியாக டக்கர் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியினை படக்குழு வெளியிட்டுள்ளது.

#Takkar Series

First ever time in Indian cinema, get to watch the Episodes before release 🤟🏻🔥

In Cinemas on JUNE 9th

Directed by @Karthik_G_Krish
🌟#Siddharth@iYogiBabu @itsdivyanshak @nivaskprasanna @editorgowtham @Sudhans2017 @thinkmusicindia @jayaram_gj pic.twitter.com/0K7D6J93j0

— Passion Studios (@PassionStudios_) June 6, 2023

Episode 1 Gunz – Expectation vs reality என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எபிசோடில் சித்தார்த் அட்டகாசமான முடி வெட்ட நினைத்து சலூனுக்கு வந்து இருக்க அவர் நினைத்ததற்கு எதிர்மாறாக முடி அவருக்கு அமைந்து விடுகிறது. இந்த கலகலப்பான காட்சியினை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பின் தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நடிகர் சித்தார்த் பெரிதும் எதிர்பார்க்கப் படும் திரைப்படமாக டக்கர் திரைப்படம் இருந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சித்தார்த் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மற்றும் சித்தா, டெஸ்ட் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..-  ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..
சினிமா

முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..- ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..

‘ஏ மன்னா.. மாமன்னா..’ தெருக்குரல் அறிவின் அசத்தலான வரிகளில் வெளியானது மாமன்னன் படத்தின் நான்காவது பாடல் – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

‘ஏ மன்னா.. மாமன்னா..’ தெருக்குரல் அறிவின் அசத்தலான வரிகளில் வெளியானது மாமன்னன் படத்தின் நான்காவது பாடல் – வைரலாகும் Glimpse இதோ..

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ்.. லைக்குகளை குவிக்கும் பதிவு – விவரம் உள்ளே..
சினிமா

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ்.. லைக்குகளை குவிக்கும் பதிவு – விவரம் உள்ளே..