கடந்த 2010-ம் ஆண்டு பாலிவுட்டில் கால்பதித்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் 2013-ம் ஆண்டு வெளியான ஆஷிக்கி 2 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய இடத்தை தந்தது. பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் சில பல சறுக்கல்கள் இருந்தாலும் பாகி 3 படத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் ஷ்ரத்தா. 

Shraddha

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த விழிப்புணர்வை செய்து வருகின்றனர். 

Shradhdha

இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா வைரஸ் நம்மை தனிமைப்படுத்தி விட்டது. அதன் காரணமாக நாம் மன அழுத்தம், தனிமை உள்ளிட்டவற்றிற்கு ஆளாகியுள்ளோம். விலங்குகளுக்கும் இதே உணர்வுகளில் தான் இருக்கும். தனிமைப்படுத்தப்பட்ட விலங்கள் தங்களை தாங்களே துன்புறுத்திக்கொள்கின்றன. இதனால் மனநிலை பாதிக்கப்படுகிறது. நாம் இங்கு விருந்தாளி தான்... மாஸ்டர் இல்லை என்ற விழிப்புணர்வு நிறைந்த பதிவை தெரிவித்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

So, you’re tired of isolation? ‏‏‎ ‎ As COVID-19 has forced the world to quarantine, we’ve all felt the effects of isolation — depression, anxiety, loneliness. Animals experience these same emotions. As humans, we tend to lack empathy for others until we’ve experienced their situation ourselves. But now that we’ve felt the suffering of captivity, let’s extend empathy toward the other living beings that we share this planet with. Millions of animals have been isolated their entire lives. In isolation, these animals exhibit concerning behaviors including self-harm. Mental health is not a uniquely human trait. This is not normal. So, you’re tired of isolation? These animals have been isolated their entire lives. No living being should live in captivity. We are guests of this planet, not masters. #Repost @earth

A post shared by Shraddha (@shraddhakapoor) on