வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என வரிசையாக வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது சசிக்குமாரை வைத்து எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக டிக்டாக் பிரபலம் மிர்ணாளினி நடிக்கிறார். இதற்கு முன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். 

mgrmagan MGRmagan

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். வினோத் ரத்திரனசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோனி தாசன் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை. 

MGRmagan MGRmagan

தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர். கிராமத்து கதை என்பதால் சசிகுமாரின் நடிப்பை காண ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள்.