இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நட்டி என்கிற நட்ராஜ் அன் தமிழில் தளபதி விஜய் நடித்த யூத் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் இது தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் நட்டி மிளகா, சதுரங்கவேட்டை திரைப்படத்திற்கு  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.

கடைசியாக தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் மிரட்டலான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் .அடுத்து இன்ஃபினிட்டி எனும் புதிய திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார் நடிகர் நட்டி.

அடுத்ததாக வேலன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரீம் ஹவுஸ்  இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் ஹரூண் எழுதி இயக்குகிறார் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. காளி & இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  முன்னதாக நந்தினி மற்றும் ஷாஸ்வி பாலா என இரு நடிகைகளின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக தற்போது ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.