மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் நடிகர் ஷாந்தனு. 

Shanthanu

இந்நிலையில் ஷாந்தனு அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

Shanthanu Libraravichandiran

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீஜர் இயக்கவுள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இப்படம், புதுமணத் தம்பதிகளின் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை மைய்யப்படுத்தி உருவாகவிருக்கிறது.