சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகர் ஷாந்தனு. ரசிகர் ஒருவர் தல அஜித் பற்றி கேட்ட கேள்விக்கு அசத்தலான பதிலை தெரிவித்துள்ளார். தல அஜித்தை யாருக்கு பிடிக்காது சொல்லுங்க. ஆன்லைன் ஃபேன் வார் எல்லாம் வேறு. பேசுகிறவர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். எப்படி தளபதி நடித்த படங்களை பார்த்து வளர்ந்தனோ அதேபோல் தான் தல அஜித் நடித்த படங்களையும் விரும்பி பார்த்துள்ளேன். 

Shanthanu

அதே மாதிரி தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விக்ரம் சார், சூர்யா அண்ணா ஆகிய அனைவரின் படங்களையும் பார்த்து ரசித்துள்ளேன். தல அஜித் நடித்த வாலி, காட்ஃபாதர், காதல் கோட்டை, அமர்க்களம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் எல்லாமே எனது ஃபேவரைட். பிறருக்கு உதவி செய்யும் அவரது குணமும், அதை யாரிடமும் பகிராமல் இருக்கும் அவரது இயல்பும் அதிகம் பிடிக்கும் என்று தல அஜித்தை பாராட்டி கூறியுள்ளார். 

Ajith

வானம் கொட்டட்டும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. இதன் பிறகு லிப்ரா நிறுவனம் தயாரிப்பில் நடிகை அதுல்யாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.