பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட பாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஷாருக்கானின் மூத்த மகனான ஆரியன் கான் மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட தனியாருக்குச் சொந்தமான சொகுசு (க்ருஸ்) கப்பலில் தடை செய்யப்பட்ட பல போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக (நார்காட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ)  போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக அந்தக் கப்பலை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சொகுசு (க்ருஸ்) கப்பலில் தடை செய்யப்பட்ட கொக்கேன்,ஹேஷிஷ்(கஞ்சா) உட்பட பல போதைப் பொருட்கள் படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் கப்பலில் பயணித்த ஷாருக்கானின் மகன் உட்பட பதிமூன்று பேரை  கைது செய்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.