கன்னடாவில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை வாழக்கையை தொடங்கியவர் நவ்யா சுவாமி.தொடர்ந்து இவர் நடித்த Thangali என்ற தொடர் பெரிய வெற்றியை பெற்றது,இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார் நவ்யா.

தொடர்ந்து பல தெலுங்கு சீரியல்களில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ராதிகா நடித்த வாணி ராணி தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

துணை நடிகையாக நடித்து வந்த இவர் இதனை அடுத்து சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இவர் கடந்த ஜூலை மாதம் கொரோனவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டார்.கொரோனாவிற்கு பிறகு இவர் aamekatha என்ற தெலுங்கு தொடரில் ஹீரோயினாக விறுவிறுப்பாக நடித்து வந்தார்.

தற்போது aamekatha தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்த கரணம் எதையும் நவ்யா தெரிவிக்கவில்லை விரைவில் புதிய சீரியல் மூலம் சந்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.திடீரென்று இவர் விலகியது அந்த தொடரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

A post shared by Navya Swamy (@navya_swamy)