விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கிறது செந்தூரப்பூவே தொடர்.ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா முக்கிய வில்லி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.யமுனா சின்னதுரை,சாந்தி வில்லியம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக அதிவிரைவில் அவதரித்தது.இந்த தொடர் தற்போது 200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் ரஞ்சித்தின் முதல் மனைவியாக வருபவரின் புகைப்படத்தை கூட இதுவரை காட்டாமல் சீரியல் குழுவினர் வைத்திருந்தனர்.

தற்போது நடிகையும்,ரஞ்சித்தின் நிஜ மனைவியுமான பிரியா ராமனின் புகைப்படத்தை சீரியல் குழுவினர் பயன்படுத்தியுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ப்ரியா ராமன் ஜீ தமிழின் செம்பருத்தி தொடரில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.