தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் தில்லுக்கு துட்டு திரைப்படங்களுக்கு பிறகு தொடர்ந்து தில்லுக்கு துட்டு 2, A1, டக்கால்டி, பிஸ்கோத்து, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி என வரிசையாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் கதாநாயகனாகவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

கடைசியாக இந்த ஆண்டில்(2022) சந்தானம் நடிப்பில் வெளிவந்த குலுகுலு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் வித்தியாசமான காமெடி ஸ்பை த்ரில்லர் படமாக சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். 

முன்னதாக கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஸ்ரீ ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் ரீமேக்காக சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம் உடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவில், அஜய் படத்தொகுப்பு செய்ய, ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். LABYRINTH FILMS நிறுவனம் தயாரித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஸ்னீக் பீக் வீடியோ இதோ…