2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

Samuthirakani Praises Jyotikas Ponmagal Vandhal Samuthirakani Praises Jyotikas Ponmagal Vandhal

இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்கிறார். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நாளை மே 29-ம் தேதியான அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. 

Samuthirakani Praises Jyotikas Ponmagal Vandhal

தற்போது இப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சி பிரபலங்களுக்காக காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த நடிகர் சமுத்திரக்கனி புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், பொன்மகள் வந்தாள்... ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய திரைப்படம். பெண்மை காப்போம்... கிரியேட்டிவ் டீம் மற்றும் ஜோதிகா மேடம் வாழ்த்துக்கள் என்று பாராட்டி பதிவு செய்துள்ளார்.