மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் ‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அடா ஷர்மா விவரம் உள்ளே – The kerala story fame adah sharma hospitalised due to hives | Galatta

கடந்த மே மாதம் 5ம் தேதி ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகை அடா ஷர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து சித்தி இதாணி, யோகிதா பீகாணி, சோனியா பலானி. தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் வெளியாகி மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியது. இந்து மத பெண்கள் இஸ்லாமியர்களால் ஏமாற்றபட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு தீவிரவாதிகளாக மாறுகின்றனர். என்பதை கதைக்கருவாக உருவான தி கேரளா ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியான போதிலிருந்தே இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கின்றன என்று நாடு முழுவதும் சர்ச்சை வெடிக்க இப்படத்தை தடை செய்ய ஆர்ப்பாட்டம் எழுந்தது. அதன்படி வங்க தேசம், கேரளா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் பெரிதளவு இப்படம் வெளியாகவில்லை. மறைமுகமாக தடை ஆனது குறிப்பிடத்தக்கது. இருந்து வடமாநிலத்தவரின் ஆதரவை அடுத்து தி கேரளா ஸ்டோரி மிகப்பெரிய வசூலை பெற்றது.  திரைப்படம் வெளியாகி மதங்கள் கடந்த பின்னும் இப்படத்தை வாங்க எந்தவொரு ஒடிடி தளங்களும் முன் வரவில்லை. இது தொடர்பாக பல பேட்டிகளில் இயக்குனர் தனது வருத்தங்களை தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை அடா ஷர்மா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெளியான தகவலின் படி நடிகை அடா ஷர்மாவிற்கு கடுமையான வயிற்றுபோக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அடா ஷர்மா அடுத்ததாக நடித்து வரும் படத்திற்கான வேலையின் போது இப்படி நிகழ்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகை அடா ஷர்மா பகிர்ந்த பதிவு தற்போது ரசிகர்களின் பிராத்தனைகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by Adah Sharma (@adah_ki_adah)

நடிகை அடா ஷர்மா தமிழில் சிம்பு – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் அறிமுகமானார். பின் பிரபு தேவாவுடன் இணைந்து சார்லி சாப்ளின் 2 வில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மௌனகுரு, மகாமுனியை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு.. - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படத்தின் முதல் பார்வை இதோ..
சினிமா

மௌனகுரு, மகாமுனியை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு.. - அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படத்தின் முதல் பார்வை இதோ..

“முழுசா சந்திரமுகியா மாறுன கங்கனாவை பார்..” அசத்தலான முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

“முழுசா சந்திரமுகியா மாறுன கங்கனாவை பார்..” அசத்தலான முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..

“நீலாம்பரி முன்னாடி என் மானமே போச்சு..” ரஜினிகாந்துடன் நிகழ்ந்த கலகலப்பான தருணம் குறித்து நடிகை மிர்னா.. – Exclusive Interview உள்ளே..
சினிமா

“நீலாம்பரி முன்னாடி என் மானமே போச்சு..” ரஜினிகாந்துடன் நிகழ்ந்த கலகலப்பான தருணம் குறித்து நடிகை மிர்னா.. – Exclusive Interview உள்ளே..