நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்க வரும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். உணவின்றி பசியில் தவிப்போருக்கு பலர் உதவி செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். 

Salman Khan Supplies Essentials Using Bullock Cart

அந்த வகையில் நடிகர் சல்மான் கான், அருகிலிருக்கும் கிராமத்தினருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்துள்ளார். மனித சங்கிலி போல வரிசையாக நின்று உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றும் வீடியோவை நடிகர் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோர் உதவிக்கு அருகில் உள்ளனர். 

Salman Khan Supplies Essentials Using Bullock Cart Salman Khan Supplies Essentials Using Bullock Cart

வாகனங்கள் கிடைக்காததால் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் பொருட்களை கொண்டு சேர்த்து வருகின்றனர். சல்மான் கான் ஏற்கனவே Being Human என்ற நிறுவனத்தை நடத்தி உதவி செய்து வருகிறார். சல்மானின் இச்செயலை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@jacquelinef143 @vanturiulia @rahulnarainkanal @imkamaalkhan @niketan_m @waluschaa @abhiraj88

A post shared by Salman Khan (@beingsalmankhan) on