ப்ரேமம் படத்தின் மூலம் தென் இந்தியாவின் Favourite நடிகையானவர் சாய் பல்லவி.நடிப்பு,நடனம் என என்னவாக இருந்தாலும் அடிச்சு தூள் கிளம்புவார் சாய் பல்லவி.தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த இவர்,இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தியா படத்தின் மூலம் தமிழில்அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான NGK,தனுஷ் நடிப்பில் மாரி 2 என்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து அசத்தினார்.மாரி 2 படத்தில் இடம்பெற்ற Rowdy Baby பாடலில் இவரது நடனத்தை பாராட்டாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.

மானாட மயிலாட உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று வந்த சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.சாய் பல்லவியின் நடிப்பை தாண்டி அவரது நடனத்திற்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோ,போட்டோக்களை பதிவிட்டு வருவார் சாய் பல்லவி.

இவர் அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன,நாக சைதன்யாவுடன் இவர் நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் Saranga Dariya என்ற பாடல் வெளியிடப்பட்டது,இந்த லிரிக் வீடியோவில் சாய் பல்லவியின் சில ஸ்டெப்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.செம ஹிட் அடித்திருந்த இந்த லிரிக் வீடியோ தற்போது 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.