சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தின் முதல் பாடல் இதோ !
By Aravind Selvam | Galatta | October 07, 2021 19:31 PM IST
![சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தின் முதல் பாடல் இதோ ! - Tamil Movie Cinema News சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தின் முதல் பாடல் இதோ ! - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/sabhaapathy-mayakkathe-maaya-kanna-lyric-video-santhanam-preeti-verma_1633624455.jpg)
விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.
சமீபத்தில் இவர் நடித்த டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.அடுத்ததாக இவர் நடித்து வரும் சபாபதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சபாபதி படத்தினை ஸ்ரீனிவாஸ் ராவ் இயக்கியுள்ளார்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சந்தானம் ஹீரோவாக நடிக்க ப்ரீதி வர்மா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.குக் வித் கோமாளி புகழ்,எஸ் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை RK என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மயக்காதே மாயக்கண்ணா என்ற இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்