“லவ் டுடே படம் இதனால் தான் வெற்றி பெற்றது" – எச் வினோத்தின் தெளிவான பதில்... வைரலாகும் வீடியோ

லவ் டுடே வெற்றி குறித்து துணிவு இயக்குனர் எச் வினோத் கருத்து - Thunivu Director H vinoth about Pradeep ranganathan Love today | Galatta

கோலாகலாமான கொண்டாட்டங்களுடன் ரசிகர்களின் பேராதரவுடன் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான படம் ‘துணிவு’. பொங்கலையொட்டி வெளிவந்துள்ள இப்படத்தின் முன்பதிவு பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் துணிவு படம் குறித்தும் தன் திரைப்பயணம் மற்றும் கடந்து வந்த விமர்சனங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை துணிவு பட இயக்குனர் எச். வினோத் நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்தார்.

அதில்  கடந்த ஆண்டு பெரியபடங்கள் பெரிய நட்சத்திரங்கள் படங்களின் வெற்றியின் மத்தியில் சிறிய படமான லவ் டுடே யாரும் எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்துள்ளது. இந்த வெற்றி அடுத்தடுத்த காலங்களில் தொடருமா என்ற கேள்விக்கு எச் வினோத்,

“லவ் டுடே படம் பழைய உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு கதையை சம கால புது தளத்துடன் கையாண்டது தான் அந்த படத்தின் வெற்றியின் காரணமாக இருக்கும். ஒரே விஷயத்தையோ அல்லது புது விஷயத்தை கொடுத்திருந்தால் அது மக்களிடம் அந்நியபட்டு போகிருக்கும். அது இந்தளவு வரவேற்பு பெற்றிருக்காது. மக்களுக்கு பிடித்த எல்லா ஆட்டத்தையும் சொல்லி விட்டு இறுதியில் ஒரு கருத்தை படத்தில் வைத்தது தான் படம் எல்லோருக்கும் பிடித்த படமாக மாறியது. தொடர்ந்து கருத்துக்களே படம் சொல்லி வந்தால் படம் மக்களுக்கு பிடிக்காமல் போய் விடும். நிறைய அறிவுஜீவி கலைஞர்கள்  இதனாலே படம் பண்ணாமல் இருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் படம் பண்ணினால் அது பத்து வருடம் கழித்து பார்வையாளர்களுக்கு பிடித்த படம் என்ற பட்டியலில் சேர்ந்துவிடும். சமகால தளத்தில் பழைய விஷயத்தை கையாண்டு மக்களுக்கு கொடுப்பதால் மங்களுக்கு பிடிக்கிறது. அதன்படியே லவ் டுடே படமும் மக்களுக்கு பிடித்திருந்தது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது நீங்கள் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வருகிறீர்கள். உங்களது மார்கெட் ஒரு தரத்தில் உள்ளது. நீங்கள் மீண்டும் சிறிய நட்சத்திரங்களை வைத்து படம் இயக்குவீர்களா? உங்களை அப்படி செய்ய விடுவார்களா? என்ற கேள்விக்கு,

“அது நம்ம கையில் தான் உள்ளது. நான் அதுபோன்று இரண்டு கதைகளை யோசித்து வைத்துள்ளேன்.ஆனால் அப்படி சிறிய படங்களை நான் கையிலெடுத்தால் அதுகுறித்த விமர்சனமோ, அட்வைஸ்களோ வரும்.  ஆனால் என்னுடைய திரை பாணி அதுதான் எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ கண்டிப்பாக அந்த சிறிய படங்களை செய்து விடவேன். என்று குறிப்பிட்டார் இயக்குனர் எச் வினோத்.

இயக்குனர் எச் வினோத் துணிவு படம் குறித்தும் மற்றும் திரை பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..


 

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக வரும் வாழை படம்... ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக வரும் வாழை படம்... ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் இதோ!

அட்லீக்கு புகழாரம் சூட்டிய ஷாருக் கான் – புது பட்டம் .. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

அட்லீக்கு புகழாரம் சூட்டிய ஷாருக் கான் – புது பட்டம் .. வைரலாகும் பதிவு இதோ..

 அவருக்கு ஒரு சுவாரஸ்யமான கதை ரெடி!  – கமல் ஹாசன் கூட்டணிக்கு  எச் வினோத் பதில்.. முழு வீடியோ இதோ..
சினிமா

அவருக்கு ஒரு சுவாரஸ்யமான கதை ரெடி! – கமல் ஹாசன் கூட்டணிக்கு எச் வினோத் பதில்.. முழு வீடியோ இதோ..