தென்னிந்திய திரையுலகில் முடிசூடா நாயகியாக அசத்தி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. 

rashmika

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா போட்டோ ஷூட் ஒன்று செய்துள்ளார். பல ரியாக்‌ஷன்களை கொண்ட அவரது போட்டோக்களை வைகைப்புயல் வடிவேலுவுடன் ஒப்பிட்டு, அந்த ரியாக்‌ஷனுடன் சேர்த்து மீம்ஸ்களை உருவாக்கி அழகு பார்த்தனர் நெட்டிசன்கள். 

Rashmikamandanna rashmikamandana

இப்படி உருவாகிய இந்த மீம்ஸ்கள் சில தினங்களாக இணையத்தை தெறிக்கவிட்டது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, என்னால் ஒத்துக்காமல் இருக்க முடியவில்லை, வடிவேலு சார் தான் க்யூட் என்று பதிவு செய்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த எதார்த்தமான பதிவிற்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.