கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து சலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம்  தெலுங்கு சினிமாவில் களமிறங்கினார். தொடர்ந்து நடித்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகில் மிக பிரபலம் அடைந்தார் ராஷ்மிகா மந்தனா.

தொடர்ந்து நடிகர் நானி மற்றும் நாகார்ஜுனா உடன் இணைந்து நடித்த தேவதாஸ், விஜய் தேவர்கொண்டா உடன் டியர் காம்ரேட், மகேஷ்பாபுவுடன் சரிலெரு நீகேவ்வாரு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியிலும் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஸ்பா திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகர் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அடவால்லு மீக்கு ஜொஹர்லூ என்னும் இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் திருமலா கிஷோர் இயக்குகிறார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். SLV சினிமாஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மேலும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.