சன் டிவியில செம ஹிட் அடிச்ச ஒரு சீரியல் நாயகி அந்த சீரியல்ல வில்லியா நடிச்சு எல்லார்கிட்டயும் திட்டு வாங்கி அனன்யான்னு இன்னைக்கு வரைக்கும் சீரியல் ரசிகர்கள் நியாபகம் வெச்சுருக்க அளவு அவங்களோட நடிப்பால் அசத்தினவங்க தான் சுஷ்மா நாயர்.சமீபத்துல தன்னோட காதல் கணவரை கரம்பிடிச்சு , வாழ்க்கையோட ஒரு புது அத்தியாயத்தை தொடங்கிருக்காங்க.அடுத்ததா இப்போ விஜய் டிவியில Recent-ஆ ஒளிபரப்பாகிக்கிட்டு இருக்க தமிழும் சரஸ்வதியும் சீரியல்ல நடிச்சிருக்காங்க,அவங்ககிட்ட ஒரு சின்ன Interview தரமுடியுமான்னு கேட்க உடனே ஓகேன்னு சொல்லி அவங்க சீரியல் வாழ்க்கை பத்தி செம Interesting பதிலெல்லாம் சொல்லிருக்காங்க அதெல்லாம் என்னன்னு பார்க்கலாம் வாங்க

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

உங்களோட இந்த நடிகை,Costume Designer கனவு எங்க தொடங்குச்சு...?

சின்ன வயசுல இருந்தே எனக்கு டான்ஸ்,ஆக்டிங்,மேக்கப் போடுறது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.நிறைய ஸ்டேஜ் ஷோஸ்ல கலந்துக்குவேன் StageFear-லாம் எனக்கு கிடையவே கிடையாது,அப்போ எனக்கு தெரியாது இதுபத்தி ஒரு படிப்பு இருக்குனு,High School-ல தான் Fashion Designing பத்தி தெரியும் அது கண்டிப்பா படிக்கணும்னு Interest வந்தது.12th படிக்கிறப்போ ஒரு Casting Call AD பார்த்துட்டு போனேன் அங்க தான் Portfolio எப்படி ரெடி பண்றது எல்லாமே சொல்லி கொடுத்தாங்க என்னோட 16 வயசுல First போட்டோஷூட்.

அப்பா கொஞ்சம் Strict அம்மா செம Supportive அவங்க தான் என்னை அதிகமாக Encourage பண்ணது,அதுக்கு அப்பறம்  அப்போ ஒருத்தர் நடிக்கவைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாரு , அந்த டைம்ல கஷ்டப்பட்டு காசெல்லாம் ரெடி பண்ணி கொடுத்தோம்.அந்த Situation-ல எனக்கு நடிப்பு மேல இருந்த Interest சுத்தமா போயிருச்சு.நல்ல படிச்சு முடிச்சேன்.First Job பார்த்தீங்கன்னா ஒரு படத்துக்கு Costume Designer-ஆ தான்.அந்த படத்துலயும் ஒரு சின்ன ரோல் குடுத்தாங்க ஆனா அது படத்துல வரல, அந்த படத்துல சுமங்கலி சீரியல் ஹீரோ நடிச்சாரு அவரு தான் இவங்க நல்ல நடிக்கிறாங்கன்னு producer கிட்ட intro பண்ணி விட்டாரு, அந்த சீரியல்ல ஒரு சின்ன ரோல் கிடைச்சது அப்டியே சீரியல் வாழ்க்கை ஸ்டார்ட் ஆகிருச்சு.

நாயகி-ல உங்க கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சது எப்படி பீல் பண்ணீங்க...?

செம ரெஸ்பான்ஸ் இருந்தது இவ்ளோ பேர் ராசிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல.நான் General-ஆ சீரியல் பார்க்குற ஆள் கிடையாது,சினிமா தான் Aim-ஆ வெச்சுருந்தேன்,வீட்ல அம்மா சீரியல் பார்த்தாங்கனாலே திட்டுவேன்.அப்போ எனக்கு தெரியல சீரியல் இவ்ளோ பேர் ரசிக்குறாங்க,லவ் பண்றங்கண்ணு,அப்படி தான் நாயகி சான்ஸ் வந்தப்பவும் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு ஒத்துக்கிட்டேன் அது ஒரு Replacement ரோல் தான்.எல்லாமே ஓகே ஆன அப்பறம் சென்னைல இருக்க Friend கிட்ட பேசுனப்போ தான் தெரிஞ்சது இது பெரிய ஹிட் சீரியல் , ரொம்ப முக்கியமான ஒரு ரோல்ன்னு, சீரியல்ல நடிச்சவங்க எல்லாருமே எனக்கு சீனியர்,ஏற்கனவே Establish ஆன ஒரு கேரக்டர்க்கு Replacement-ஆ போய் நடிக்கிறது ரொம்ப கஷ்டம் But மக்கள் ஏத்துக்கிட்டாங்க நான் Sign பண்ண நேரம் அனன்யா கேரக்டர்க்கு நல்ல ஸ்கோப் இருந்தது.

Serial யூடியூப்ல upload பண்ணதும் பயங்கரமா திட்டு விழும் அதுவும் ஒரு வகையில அவங்கள அந்த அளவு அந்த character பாதிச்சதுனால தான் திட்றாங்க பல பேர் சூப்பரா நடிக்கிறீங்கன்னு வந்து பாராட்டிருக்காங்க .அடுத்து Dubai-க்கு ஒரு பேஷன் ஷோவுக்காக போயிருதேன் அங்க நிறைய பேர் சூப்பரா நடிக்கிறீங்க போட்டோலாம் எடுத்தாங்க அப்போதான் நம்மளையும் Recognize பன்றாங்களே சூப்பர் அப்படின்னு இருந்தது,இந்த கேரக்டர் பண்றப்போ நிறைய கத்துக்கிட்டேன் விஜய்சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ்ல அந்த கேரக்டர் எப்படி அமைஞ்சதோ அதுமாதிரி எனக்கு அனன்யா ஒரு லைப்டைம் ரோல் இதுமாதிரி திரும்ப ஒரு சான்ஸ் கிடைக்கிறது கஷ்டம்.இன்னும் நிறைய பேர் என்னை அனன்யான்னு ஞாபகம் வெச்சுருக்கப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

வில்லி கேரக்டர்னாலே தமிழ்நாட்டு தாய்மார்கள் கொஞ்சம் கோபப்படுவாங்க அந்த மாதிரி மாட்டுன Moment ஏதாவது இருக்கா...?

ஏகப்பட்ட திட்டு வாங்கியிருக்கேன் , பலபேரு கேவலமா கழுவி ஊத்திருக்காங்க, Interesting ஆன ஒன்னு நாயகி ஷூட்டிங் அப்போ எப்பயுமே நான் போற கிராமத்து கோவில் ஒண்ணு இருக்கு அப்போ சீரியல் ஒரு செம த்ரில்லிங் ஆன point-ல போயிட்டு இருக்கு , கோவிலுக்கு வெளிய வேர்க்கடலை விக்கிற பாட்டி ஒருத்தங்க கிட்ட கடலை வாங்கலாம்னு போறேன் அவங்க என்னை Recognize பண்ணிட்டாங்க , நீ அந்த அனன்யா தானே ஏன்மா அந்த ஆனந்தி பொண்ணை இப்படி பாடப்படுத்துற நேத்து அந்த சின்ன பையனை கடத்திருக்க ஏன் இப்படி பண்றன்னு கோபமா கேட்டாங்க,நானும் டக்குனு அனன்யாவா மாறி அவங்களுக்கு Explain பண்ணிட்டு இருந்தேன்.அவங்க இந்த மாதிரியெல்லாம் பண்ணகூடாதுன்னு அட்வைஸ் பண்ணி வேர்க்கடலையும் கொடுத்து அனுப்பிவெச்சாங்க.

அனன்யாவுக்கும் சுஷ்மாவுக்கும் இருக்க ஒற்றுமைகள் / வேறுபாடுகள் எதாவது இருக்கா...?

அனன்யா வந்து பார்த்தீங்கன்னா ரொம்ப stubborn அவளுக்கு ஒன்னு வேணும்னா அது கண்டிப்பா வேணும் அதுக்காக என்ன வேணாலும் செய்வா அவளோட லைப்ஸ்டைல் அப்படி Dominant,Not Understanding நான் அதுக்கு அப்படியே Opposite செம Understanding .Similarities பாத்தீங்கன்னா never giveup attitude , true love அதெல்லாம் எனக்கும் பொருந்தும்.

உங்க லவ் ஸ்டோரி பத்தி சொல்லுங்க திருமண வாழ்க்கை எப்படி போகுது...?

சின்ன வயசுல இருந்து லவ், நாங்க ரெண்டு பெரும் வேற வேற Religion வேற ஏகப்பட்ட பிரச்சனை வந்தது.2 வருஷத்துக்கு முன்னாடி வீட்ல சொல்லி பல போராட்டங்களுக்கு பிறகு ஒத்துக்க வெச்சேன் எங்க வீட்ல.நாயகி முடிச்சுட்டு கல்யாணாம் பண்ணிக்கலாம்னு தான் பிளான் பண்ணி வெச்சுருந்தேன் , அவர் Cricketer துபாய்ல Coach-ஆ இருக்காரு , நானும் கல்யாணம் பண்ணிட்டு போய் அங்க மாஸ்டர்ஸ் பண்ணலாம்னு Plan வெச்சுருந்தேன் Corona எல்லாத்தையுமே கெடுத்துருச்சு.கல்யாணம் Unexpected தான் கோவிட் கல்யாணம் இது என்னைக்கு Date-ன்னு முடிவு பண்ணாமலே இருந்தோம் அப்பறம் டக்கு டக்குனு எல்லாமே நடந்தது.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

கல்யாணத்துக்கு அடுத்து என்ன பொறுப்புகள் புதுசா எடுத்துக்கிட்டிங்க...?

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா தான் நம்ம ஆக்டர் மத்தபடி நானும் Usual-ஆ வீட்ல எல்லா வேலையுமே செய்வேன் அம்மா எல்லாமே சொல்லி கொடுத்து தான் வளர்த்தாங்க , கல்யாணத்துக்கு அப்பறம் கொஞ்சம் லைப்ஸ்டைல் மாறிருக்கு அவரோட இருக்காதே ஒரு சந்தோஷமா இருக்கு.அவர் ரொம்ப Supportive வேலையை Split பண்ணி பண்ணுவோம் இதெல்லாம் இப்போ என்ஜோய் பண்றேன் ஏன்னா கொஞ்ச நாள்ல அவரும் துபாய் போய்டுவாரு நான் கம்மிட்மெண்ட்ஸ் எல்லாம் முடியுற வரைக்கும் இங்க இருக்கனும் இதெல்லாம் மிஸ் பண்ணுவேன் அப்போ.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

கல்யாணத்துக்கு அடுத்து நடிக்கிற முதல் சீரியல் தமிழும் சரஸ்வதியும் அதை பத்தி சில Interesting ஆன விஷயங்கள் பகிர்ந்துக்க முடியுமா...? உங்க ரோல் எப்படி இருக்கும் இதுலயும் வில்லி தானா...?

விஜய் டிவியில ஒரு சீரியல் பண்ணணும்னு ரொம்ப ஆசை, விகடனும் நாயகி டீமும் புது சீரியல் பன்றாங்கன்னு  சொன்னதும் குமரன் சார் கிட்ட கேட்டேன் அவர் ஒரு ரோல் இருக்குன்னு சொன்னாரு என்னோட Best Friends நிறைய பேர் இருக்காங்கன்னு OK சொல்லிட்டேன்.ஒரு சின்ன Important ரோல் திரும்ப நாயகி பண்ற ஒரு Feel தான் அனன்யா மாதிரி இருக்காது , என்ன யாரெல்லாம் நாயகில வெறுத்தாங்களோ அவங்க எல்லாம் தமிழும் சரஸ்வதியும்ல என்ன லவ் பண்ணுவாங்க , எனக்கு ஏத்த மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்துருக்காங்க நல்லா பண்ணுவேன்னு நம்புறேன் மக்கள் தான் பார்த்துட்டு சொல்லணும்.விஜய் டிவியில இது என்னோட முதல் சீரியலா அமைஞ்சது ரொம்ப சந்தோஷம்,அவங்களோட Shows-ல கலந்துக்க ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

உங்க சீரியல் டெலிகாஸ்ட் இப்போ Recent-ஆ ஸ்டார்ட் ஆகியிருக்கு எதுக்காக இந்த சீரியல் பார்க்கணும்,என்ன புதுசா இருக்கும்,என்ன ஸ்பெஷலா இருக்கும் அப்டிங்கிறத ரசிகர்களுக்காக சொல்லுங்க...?

விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்னாலே Different-ஆ இருக்கும்,பொண்ணுங்களுக்கு Strong ஆன கேரக்டரா இருக்கும்,அதே மாதிரி தான் இதுவும் வாழ்க்கையில படிப்பு மட்டுமே முக்கியம் இல்ல படிக்காட்டியும் சாதிக்கலாம்னு ஒரு செம Inspiring ஸ்டோரி.நம்ம வாழ்க்கைல நடக்குற கதையை ரொம்ப இயல்பா சொல்லிருப்பாங்க எல்லாரும் மறக்காம நிச்சயம் பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்,செம Motivating-ஆ Entertaining-ஆ எல்லாருக்கும் ஒரு StressBuster-ஆ இந்த சீரியல் நிச்சயம் இருக்கும்.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

லாக்டவுன்ல புதுசா கத்துகிட்ட விஷயங்கள் எதாவது இருக்கா...?

Mask எப்படி பண்றதுன்னு கத்துக்கிட்டேன்,Baking மேல Interest இருந்தது So பேக்கிங் சூப்பரா கத்துக்கிட்டு இருக்கேன்,choco fudge brownie,red velvet brownie இதெல்லாம் செமயா பண்ணுவேன் இதெல்லாம் சும்மா அப்படியே பண்ணிட்டு இருக்கப்போ வீட்ல இருக்கவங்க சூப்பரா இருக்குனு ரொம்ப பாராட்டுனாங்க , சும்மா இருக்கத்துக்கு இதுவும் ட்ரை பண்ணலாமேன்னு Start பண்ணி இப்போ நல்லா போயிட்டு இருக்கு,இது இப்போ எனக்கு ஒரு Passion ஆகிடுச்சு.

லாக்டவுன்ல எந்த விஷயத்தை ரொம்ப மிஸ் பண்றீங்க...?

Travel பண்றது தான். ஹனிமூன் கூட போக முடியல இந்த லாக்டவுன்னால . பெங்களூர்ல இருக்கேன் இங்க இருந்து சென்னை கூட அவ்ளோ ஈஸியா போக முடியல , ரொம்ப வீட்டுக்குள்ளயே இருக்க மாதிரி இருக்கு , Marriage அப்பறம் துபாய் போற பிளான் இருந்தது அதுவும் போக முடியல. என்னோட பேமிலி கூட spend பண்ற டைம் கொஞ்சம் மிஸ் பண்றேன்

சுஷ்மாவோட Celebrity Crush...?

Crush-னா First துல்கர் சல்மான் தான்.ரொம்ப பிடிக்கும் , அவர் செம Charming , அழகா இருக்காரு,அப்பா பெரிய ஆள் அப்படிங்கிறதை எல்லாம் தாண்டி , அவர் நினச்சுருந்தா ஈஸியா அப்பா சப்போர்ட்ல வந்துருக்க முடியும் ஆனால் அதை யூஸ் பண்ணாம அவர் Industry-ல வந்தது Crush தாண்டி ஒரு செம Inspiration அவரு.

தல அஜித்தோட தீவிரமான ஃபேன் நான் செம Handsome ஹீரோன்னா அவர் தான்,தீனால இருந்து அவர் மேல அப்படி ஒரு நேசம்,அப்போ இருந்தே தீனா மாமான்னு தான் சொல்லவேன் எல்லார் கிட்டயும் ,அடுத்து வலிமை பார்க்க செமயா வெயிட் பண்றேன்

அடுத்ததா சூர்யா அவரோட கண்ணே நிறைய லவ் பண்ணும் வாரணம் ஆயிரம்,சூரரைப் போற்றுலாம் பார்த்துட்டு இப்படி ஒரு புருஷன் கிடைக்க மாட்டாரான்னு இருந்துருக்கேன் ஆனா அப்படிபட்ட ஒருத்தர் தான் எனக்கு புருஷனா வந்துருக்காரு.

Being a Costume Designer யாருக்கு Costume Design பண்ணனும்னு ஆசை படுறீங்க...?

Ranveer Singh-க்கு Costume பண்ணனும்னு ரொம்ப ஆசை , அவர் தான் பத்மாவத் படத்துல Variety Variety-ஆ Costumes ட்ரை பண்ணுவாரு,South-ல Vijay Devarakonda Different-ஆ Try பண்ணறாரு பண்ணனும்னு ஒரு ஆசை இருக்கு.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

இந்த மாதிரி ஒரு Role-ல நடிக்கணும் அப்டின்னு எதாவது கனவு இருக்கா...?

எனக்கு Biopic நடிக்கணும்னு ரொம்ப ஆசை , இப்போ நடிகையர் திலகம் பார்த்தீங்கன்னா அது ஒருத்தங்களோட Complete Lifestory பத்தி இருக்கும் , அப்படி ஒரு படம் ஒரு நல்ல Social Activist-டோட Biopic எடுத்து நடிக்கணும் அவங்க தான் மக்களுக்கு நிறைய அவங்க லைப் Full-ஆ சேவை பன்றாங்க அவங்களோட வாழ்க்கையை எடுத்து மக்களுக்கு சொல்ல மாதிரி ஒரு படம் பண்ணனும்  , நாங்க எல்லாம் OnScreen Stars அவங்க தான் Real Heroes.

சுஷ்மாவுக்கு Costume Designer-ஆ இருக்கது பிடிச்சிருக்கா இல்லை நடிகையா இருக்கது பிடிச்சிருக்கா...?

கண்டிப்பா நடிகையா இருக்கது தான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு , என்னால நிறைய Explore பண்ண முடியுது நான் பண்றதுக்கு Immediate-ஆ ரீச் கிடைக்குது.முன்னாடி கேட்டு இருந்திங்கன்னா Costume Designer-ன்னு சொல்லிருப்பேன் இப்போ நான் ஒரு Costume Designer-ங்கிறதையே நிறைய பேர் மறந்துட்டாங்க.

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

சுஷ்மாவோட அடுத்தகட்ட திட்டம் என்ன...? உங்களோட Future Projects பத்திய அப்டேட் எதாவது...?

இப்போ தமிழும் சரஸ்வதியும்ல ஒரு ரோல் பண்ணிட்டு இருக்கேன் , என்னோட முதல் கன்னட படம் Rhymes 2019-லேயே ரிலீஸ் ஆக வேண்டியது கொஞ்சம் Delay ஆகிருச்சு , இப்போ Theatres திரும்ப திறந்ததும் சீக்கிரம் ரிலீஸ் வேலை ஆரம்பிக்கும்.இப்போதைக்கு அது மட்டும்தான் இன்னும் நிறைய சீரியல்,படம்லாம் நடிக்கணும்னு எனக்கு ஆசை , சில Projects இந்த Lockdown-ல என்னால ஒத்துக்க முடியாம போச்சு இனிமே கண்டிப்பா நடிப்பேன்

nayagi fame sushma nair opens up about her next serial thamizhum saraswathiyum

நம்ம கேட்ட கேள்விக்கெல்லாம் ரொம்ப அழகா பதில் சொன்னாங்க சுஷ்மா.சீரியல்ல வேணும்னா இவங்க வில்லியா இவங்க ரசிகர்கள் மனசுல எப்பவுமே இவங்க ஒரு கில்லி தான்,அடுத்ததா இப்போ நடிக்கிற சீரியலும் பெரிய ஹிட் ஆகணும்ன்னும்,அவங்களோட முதல் படம் வெள்ளித்திரைல ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிக்கணும்ன்னும் அவங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சு Interview-வை நிறைவு செஞ்சோம்.