கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா.இந்த படத்தில் இவரது அழகிற்க்கும்,நடிப்பிற்கும் மயங்கிய ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.சில மொழிகளில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கான வரவேற்பு அங்கும் அதிகமாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்தார் ராஷ்மிகா.ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பலராலும் பாராட்ட பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.இதனை தவிர புஷ்பா உள்ளிட்ட சில முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.மிஷன் மஞ்சு என்ற படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா.

இவர் சமீபத்தில் Top Tucker ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ராஷ்மிகா , பல சுவாரசிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.தளபதி விஜயுடன் எப்போது ஜோடி சேர போகிறீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் என்று பதிலளித்துள்ளார் , மேலும் தளபதி விஜய் குறித்து ஒரு வார்த்தையில் காதல் என்றும் தெரிவித்துள்ளார்.அல்லு அர்ஜுன் குறித்தும்,விஜய் தேவர்கொண்டா பற்றியும் சுவாரசிய பதிலை தெரிவித்துள்ளார்.