கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  உள்ளனர்.

Ram Cinemas Tweets About Big Movie Release OTT

இதன் முதற்கட்டமாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாகும் என்ற தகவல் வெளியானது.இதற்கு திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் சூர்யா,ஜோதிகா படங்களை திரையிடப்போவதில்லை என்றும் போர்க்கொடி தூக்கினர்.OTTயில் படங்களை வெளியிட 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மாஸ்டர்,சூரரை போற்று உள்ளிட்ட படங்களும் வெளியாகும் என்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவின.

Ram Cinemas Tweets About Big Movie Release OTT

OTT தளங்களில் பெரிய படங்கள் வெளியானால் அதன் விலை உயரும்,ஒரு வாரத்திற்கு இதனை முறை தான் பார்க்கமுடியும் என்ற கட்டுப்பாடுடன் வரும்.மேலும் OTTயில் திரைப்படங்களை பார்த்தாலும் திரையரங்கில் பார்க்கும் அனுபவம் இருக்காது.பெரிய படங்களை தியேட்டரில் ரசிகர்கள் வரவேற்புடன் பார்ப்பதே அதன் அழகு என்று பிரபல திரையரங்கமான ராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.மேலும் தான் OTT தலங்களுக்கு எதிரானவர் அல்ல திரையரங்கில் பார்க்கவேண்டிய படங்களை நிச்சயம் திரையரங்கில் தான் பார்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.