பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Ram Charan Jr NTR Rajamouli RRR Postponed Oct

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Ram Charan Jr NTR Rajamouli RRR Postponed Oct

படத்தின் ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR இருவருக்கும் ஏற்பட்ட காயங்களால் படப்பிடிப்பு தாமதமடைந்து வருவதாகவும்.இந்த படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Ram Charan Jr NTR Rajamouli RRR Postponed Oct