தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிவருகிறார்.

Vaanam Kottattum En uyir Kaatre Song Release Jan20

Vaanam Kottattum En uyir Kaatre Song Release Jan20

இயக்கம் மட்டுமல்லாமல் அவ்வப்போது தயாரிப்பும் செய்துவந்தார்.இவரது மெட்ராஸ் டாக்கீஸ் தற்போது வானம் கொட்டட்டும் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை தனா இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Vaanam Kottattum En uyir Kaatre Song Release Jan20

Vaanam Kottattum En uyir Kaatre Song Release Jan20

சித் ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் நான்காவது பாடலான என் உயிர் காற்றே என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.