சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Prabhas 20 Rumoured To be Titled John Pooja Hegde

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

Prabhas 20 Rumoured To be Titled John Pooja Hegde

இந்த படத்திற்கு Jaan என்று பெயரிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.தற்போது இந்த படத்திற்கு ஜான் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhas 20 Rumoured To be Titled John Pooja Hegde