ஆகச் சிறந்த நடிகராக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த மாதவன் ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கி சாதித்துள்ளார். கடந்த ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணன் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டினர். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்து ரசித்து மாதவன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி தில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது மாதவன் மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் இருவரையும் நேரில் சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்த அந்த தருணத்தை வீடியோவாக நடிகர் மாதவன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)