திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ். சினிமா தாண்டி நிஜ வாழ்விலும் லாரன்ஸ் ஹீரோ தான். ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவிற்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் சந்திரமுகி 2 படம் குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். 

அதில், சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயினாக ஜோதிகா மேம், சிம்ரன் மேம் மற்றும் கியரா அத்வானி இவர்கள் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தவறான செய்தி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். ஸ்கிரிப்ட் பணிகள் போய் கொண்டிருக்கிறது. கொரோனா பிரச்னைகள் முடிந்தவுடன் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் லாரன்ஸ்.  லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

சமீபத்தில் லாரன்ஸ் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவரின் வீடியோவை பார்த்து விட்டு அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று உதவி செய்தார். 

இந்நிலையில் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில் என்னுடைய திரை வாழ்க்கை இந்த பாட்டிலிருந்து தான் ஆரம்பமானது என்று அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற மகாகணபதி பாடலின் வீடியோ காட்சியை பதிவு செய்துள்ளார். இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தல அஜித் சாருக்கும், சரண் சாருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.