கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.

Producer SR Prabhu About OTT Release Issue

OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.

Producer SR Prabhu About OTT Release Issue

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் OTTயில் வெளியாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வந்தது.இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Producer SR Prabhu About OTT Release Issue

இது குறித்து தற்போது பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.OTTயும்,திரையரங்குகளும் வேறு வேறு உலகங்கள்.தயாரிப்பாளர்கள் தான் தியேட்டருக்கு கண்டன்ட் தரும் நபர்கள் அதனால் இது குறித்து திரையரங்க உரிமையாளர்களும் அச்சப்பட தேவையில்லை.நாம் இந்த கடுமையான நேரத்தை கடந்து வந்து பின்னர் ஒரு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.